நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோனாஸ்-பெட்ரோஸ் நிறுவனங்களின் கலந்துரையாடல்களில் தெளிவு அவசியம்: வான் ஃபேசால் கருத்து 

கோலாலம்பூர்: 

கூட்டரசு அரசாங்கம்- சரவாக் மாநில அரசாங்கம் இணைந்து கலந்துரையாடும் இந்த PETRONAS- PETROS விவகாரங்களில் தெளிவு அவசியம் என்று தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மத் ஃபேசால் கூறினார். 

இந்த இரு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு கலந்துரையாடல் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினரான வான் அஹ்மத் ஃபேசால் கேட்டுக்கொண்டார். 

PETROS- PETRONAS விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரும் சரவாக் மாநில பிரிமியர் அபாங் ஜொஹாரியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். 

அதில், சரவாக் மாநிலத்தில் பெட்ரோனாஸ் நிறுவனம் செயல்பட மாநில அரசின் உரிமம் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொன்னார். 

என்னதான் PETROS நிறுவனம் மாநில எரிவாயு தொடர்பான விவகாரங்களில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் PETRONAS மலேசியாவின் எரிவாயு, எண்ணெய் தொழிற்துறையில் வியூக, பொருளாதார பங்களிப்பைக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset