நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரம் என்பது ஆடம்பரம் அல்ல என்பதை கெஅடிலான் இளம் தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்: அடாம் அட்லி

ஜொகூர்பாரு:

அதிகாரம் என்பது ஆடம்பரம் அல்ல என்பதை கெஅடிலான் இளம் தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அடாம் அட்லி கூறினார்.

முந்தைய அரசாங்கங்கள் செய்த தவறுகளை நாம் மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும்.

அதற்கு இளம் கெஅடிலான் தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் அது  வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

மக்களின் நம்பிக்கையை துரோகம் செய்வது, மக்கள் தந்த ஆதரவை வாபஸ் பெறுவது ஆகியவை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

இதை இளம் தலைவர்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

கெஅடிலானின் போராட்ட வரலாறு சில தனிநபர்கள் மீதான வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக மக்களைப் புறக்கணிக்கும் நிர்வாகத்தின் ஊழலுக்கு எதிரானது.

அதிகாரம் என்பது ஆடம்பரமாகவோ அல்லது செல்வத்தைக் குவிப்பதற்கோ ஒரு கருவி அல்ல.

இது ஒரு மோசமான கடந்த கால நடைமுறை. இதை நாம் மீண்டும் செய்யக்கூடாது.

நாம் மக்களுக்கு முதுகைத் திருப்பினால், மக்கள் மீண்டும் நமக்கு அதையே செய்வார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

நமக்கு அப்படி நடந்தால் நாம் போராடியது, கோஷமிட்டது, ஆசைப்பட்டது எல்லாம் வீணாகிவிடும் என்று அவர் இன்று கெஅடிலான் இளைஞர் பிரிவு தேசிய மாநாட்டில் பேசும்போது கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset