நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ரஃபிசி ரம்லி கலந்துகொள்வார்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் எதிர்பார்ப்பு 

கோலாலம்பூர்: 

பிகேஆர் கட்சியின் தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் துணைத்தலைவர் ரஃபிசி ரம்லி கலந்து கொள்வார் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரதமரும் பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

ரஃபிசி ரம்லி கூட்டத்திற்கு வரவில்லை என்று தம்மிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆக, ரஃபிசி ரம்லி வருவார்கள் என்று தாம் எண்ணம் கொள்வதாக அவர் சொன்னார். 

அமைச்சரவை கூட்டத்தில் ரஃபிசி ரம்லி கலந்து கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

முன்னதாக, பிகேஆர் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான வாக்களிப்பில் கலந்து கொண்ட பிரதமர் அன்வார் இப்ராஹிம் இவ்வாறு சொன்னார். 

பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு ரஃபிசி ரம்லி, நூருல் இசா அன்வார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset