நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓய்வு பெறும் வயதை 65ஆக நீட்டிக்க மனிதவள அமைச்சு ஆய்வு: மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல் 

கோலாலம்பூர்: 

ஓய்வு பெறும் வயது வரம்பை 65ஆக நீட்டிக்க மனிதவள அமைச்சு ஆழமாக ஆய்வு செய்து வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார். 

இந்த விவகாரத்தை மனிதவள அமைச்சின் சிறப்பு செயற்குழு ஆராய்ந்து வருகிறது. 

இந்த சிறப்பு செயற்குழுவிற்கு மனிதவள அமைச்சின் துணை தலைமை செயலாளர் முஹம்மத் ஷஹாரின் உமார் தலைமையேற்றார். 

அரசு, தனியார் துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களிடம் 65 ஆக வயது வரம்பை உயர்த்தும் தொடர்பாக கருத்துகள் கேட்கப்படும் என்று டீவன் சிம் சொன்னார். 

முன்னதாக, ஓய்வு பெறும் வயது வரம்பை 60 லிருந்து 65ஆக உயர்த்த அரசாங்கம் மதிப்பீடு செய்து வருவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset