நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் தேர்தலில் எனக்கு எந்த அணியும் இல்லை: அன்வார்

ஜொகூர்பாரு:

கெஅடிலான் கட்சித் தேர்தலில் எனக்கு எந்த அணியும் இல்லை என்று அதன் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கட்சியின் மத்திய செயற் குழுவிற்கு வரிசைக்கு வாக்களிக்க அதிக நேரம் எடுத்தது காரணம் நான் அணியையும் சேர்ந்தவன் இல்லை 

மேலும்  விருப்பமான வேட்பாளர்களின் பட்டியலையும் நம்பியிருக்கவில்லை என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

நான் எந்த அணியின் பட்டியலையும் கொண்டு வரவில்லை. அதனால் தான் இவ்வளவு நேரம் ஆனது.

நான் ஒவ்வொன்றாக சிந்தித்து பார்த்து வாக்களித்தேன். அதே போன்று சிறந்ததைப் பார்த்து வாக்களிப்போம்.

இங்கே பாதி அணி, அங்கே பாதி அணி இருந்தால் நான் வாக்களிக்க மாட்டேன்.

இருவரின் முடிவிலும், சிறந்தவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset