நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அனைத்துலக மாணவர்களுக்குக் கல்வி பயில அனுமதி இல்லை: சைஃபுடின் அப்துல்லா கண்டனம் 

கோலாலம்பூர்: 

அனைத்துலக மாணவர்களை இனி ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளாது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் எடுத்துள்ள முடிவு குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைஃபுடின் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 

டிரம்பின் இந்த செயல் என்பது நாகரீகமற்ற மற்றும் கல்வி கற்கும் சுதந்திரத்தைப் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். 

பல்கலைக்கழகம் என்பது உண்மை, நியாயம், நீதி ஆகியவை கற்கும் ஓர் இடமாக கருதப்படுகிறது. இருப்பினும் அமெரிக்க நிர்வாகம் கொண்டு வந்திருக்கும் இந்த நிலை வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார். 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் புதிய அனைத்துலக மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் நடப்பில் உள்ள அனைத்துலக மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்திற்கு இடம்பெயறலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset