நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய கெஅடிலான் தலைமைத்துவத்திற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் வாக்களித்தார்

ஜொகூர்பாரு:

புதிய கெஅடிலான் தலைமைத்துவத்திற்கான தேர்தலில்  பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்களித்தார்.

கெஅடிலான்  தலைவருமான அவர் பெர்ஜெயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் கட்சியின் மத்திய தலைமைத்துவ தேர்தலுக்கு நேரடியாக வாக்களிக்கும் பொறுப்பை நிறைவேற்றினார்.

கெஅடிலான் ஆலோசனைக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் மதியம் 12.07 மணியளவில் டத்தோஶ்ரீ அன்வார்  அங்கு வந்தார்.

பின்  டாக்டர் வான் அசிசாவும் வாக்களிக்கும் தனது பொறுப்பை  அவர் நிறைவேற்றினார்.

கெஅடிலான் பொதுச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சலே,  தகவல் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்,  மத்திய தேர்தல் குழு தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாலிஹா முஸ்தபா ஆகியோர் இருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset