நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தல், சபா மாநிலத் தேர்தலுக்கு கெஅடிலான் மகளிர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஃபட்லினா

ஜொகூர் பாரு:

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்கும் சபா மாநிலத் தேர்தலுக்கும் கெஅடிலான் மகளிர் பிரிவு  தயாராக இருக்க வேண்டும்.

அப்பிரிவின் தலைவர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

இந்த விவகாரத்தில் கெஅடிலான் மகளிர் பிரிவு  மெத்தனமாக இருக்க  கூடாது.

குறிப்பாக வேட்பாளர் எதிர்பார்ப்புகளுக்கு பயிற்சி உட்பட அனைத்திற்கு மகளிர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

தயார் நிலைக்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சி நிரலையும் முன்கூட்டியே முடிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானது.

கெஅடிலான் மகளிர்  துணைத் தலைவரும் உதவித் தலைவரும் வரவிருக்கும் சவாலை, அதாவது சபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பயிற்சி உட்பட பல திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

"வெற்றி பெற ஓடு" என்று முத்திரையிட்டப்பட்ட இந்தத் திட்டம், போட்டியிடும் அனைத்து இடங்களையும் வெல்ல கெஅடிலான் மகளிர்  தெளிவான கவனம் செலுத்தும்.

கெஅடிலான் மகளிர் பிரிவு மாநாட்டில் பேசிய ஃபட்லினா சிடேக் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset