நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்பா உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணை போலிசார் கைது செய்தனர்

கோத்தாபாரு:

ஸ்பா உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.

கிளந்தான் மாநில போலிஸ் தலைவர் முகமட் யூசோப் மாமாட் இதனை தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை கிளந்தான், பாச்சோக்கில் ஒரு ஸ்பா உரிமையாளர் மீது ஆசிட் வீசப்பட்டத்தால் அவர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை போலிசார் கைது செய்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் கோலா கிராய் நகரில் உள்ள ஒரு ரப்பர் தொழிற்சாலைக்கு முன்னால் 38 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கிளந்தான் போலிஸ்படையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு,  பாச்சோக் போலிஸ்படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பல உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஒரு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரிகிறார், அவருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை.

மேலும் போலிசார் ஒரு பெரோடுவா மைவி கார், ஒரு கைத்தொலைபேசி, ஒரு வாகனக் கட்டுப்பாட்டு சாதனத்தையும் பறிமுதல் செய்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset