நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் 112 இந்திய, வங்காளதேச, பாகிஸ்தானியர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது

சிப்பாங்:

கேஎல்ஐஏவில் 112 இந்திய, வங்காளதேச, பாகிஸ்தானியர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியதால் அவர்கள்  நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வந்தடைந்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது.

ஆனால் அவர்கள் குடியேற்ற சோதனைகளுக்காக  முகப்பிடங்களுக்கு வரவில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

கேஎல்ஐஏவில் உள்ள ஏகேபிஎஸ்  கண்காணிப்புப் பிரிவின் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 நபர்களில் இவர்களும் அடங்குவர் என மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் (ஏகேபிஎஸ்) தெரிவித்துள்ளது.

எங்கள் சோதனை முடிவுகள், நீண்ட காலத்திற்கு முன்பு வேண்டுமென்றே தரையிறங்கியவர்களில் பலர் குடியேற்ற முகப்பிடங்களுக்கு செல்லவில்லை என்பதைக் கண்டறிந்தன.

மேலும் இந்த நாட்டிற்கு வந்ததன் நோக்கம் குறித்து அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகங்களை எழுப்பின.

இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஏகேபிஎஸ் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset