நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை

ஷா ஆலம்: 

மின்னியல் சிகிரெட்டுகளைப் பிரபலப்படுத்தும் வகையில் வெளியிடப்டும் இலக்கவியல் மற்றும் எல்.இ.டி. உள்பட அனைத்து வடிவிலான விளம்பரங்களையும் தடை செய்து பறிமுதல் செய்யும்படி அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் சிலாங்கூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகின்றது. 

இளம் தலைமுறையினரை மின்னியல் சிகரெட் அபாயத்திலிருந்து காப்பாற்றும் நோக்கிலான இந்த நடவடிக்கை 2023-ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (சட்டம் 852) கீழ் மேற்கொள்ளப்படுவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

13 முதல் 17 வயது வரையிலான பதின்மை வயதினரில் ஏறக்குறைய 14.9 விழுக்காட்டினர் மின் சிகரெட்டைப் பயன்படுத்துவது 2022ஆம் ஆண்டு தேசிய சுகாதார மற்றும் நோய் மீதான ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வின் முடிவுகள் வலியுறுத்துகின்றன. 

இவ்விவகாரம் தொடர்பில் ஆட்சிக்குழு இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் இதன் கொள்கைகள் மற்றும் அவசியம் குறித்து விவாதிக்க சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்தத் தடை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னர், எந்த வடிவிலான வேப் விளம்பரத்தையும் பறிமுதல் செய்யும்படி ஊராட்சி மன்றங்களுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் வேப் மற்றும் மின் சிகிரெட் சார்ந்த பொருள்களை விற்பனை செய்வதை தடை செய்வது தொடர்பான பரிந்துரை மாநில சட்டமன்றத்தின் அடுத்தக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இத்தகைய மின் சிகிரெட்டுகளைப் புகைப்பதாக எழுந்த புகார்கள் உள்பட இதன் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset