நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் யானைகள் நடமாட்டமுள்ள முதன்மை சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கோத்தா பாரு:

கிளந்தானில் யானைகள் நடமாட்டமுள்ள முதன்மை சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மாநில வனவிலங்கு பாதுகாப்பு துறை இயக்குனர் முஹம்மத் ஹஃபிட்ஸ் ரோஹானி தெரிவித்தார்.

அவற்றில் முக்கிய சாலைகள் மற்றும் மாநிலத்திலிருந்து வெளியேறும் வழிகள் அடங்கும்.

காடுகளில் இருந்து வரும் யானைக் கூட்டங்கள் பொது சாலைகளைக் கடக்கப் பயன்படுத்துகின்றன.

பேராக்கில் உள்ள ஜெலி மற்றும் கெரிக்-கை இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையைத் தவிர, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் ஜெலி, குவா முசாங் மற்றும் கோலா கிராய் ஆகியவை அடங்கும்.

எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களை எச்சரிப்பதற்காக இந்த பாதைகளில் எச்சரிக்கை பலகைகளை நிறுவியுள்ளோம் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset