
செய்திகள் மலேசியா
எம்சிஎம்சி-க்கு InDrive, Maxim ஆகிய செயலிகளை முடக்கம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்னும் கிடைக்கவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்
புத்ரா ஜெயா:
ரஷ்யாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் InDrive, Maxim ஆகிய செயலிகளை முடக்க கோரி மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கு எந்த விண்ணப்பமும் கிடைக்கப் பெறவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
முன்னதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் InDrive, Maxim ஆகிய இரு இ-இயெலிங் நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளை ஜூலை 24-ஆம் தேதி முதல் நிறுத்த உத்தரவிடப்பட்டதாக கூறினார்.
இருப்பினும், இ-ஹெய்லிங் பயன்பாடுகளைத் தடுப்பதற்கான எந்த விண்ணப்பங்களையும் மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் பெறவில்லை என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்.
விண்ணப்பம் இருந்தால், சட்டத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் தயாராக இருப்பதாகபாஹ்மி கூறினார்.
விண்ணப்பம் வழங்கப்பட்டால், சட்டத்தின் அடிப்படையில் மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையஅதன் கடமைகளைச் செய்யும் என்று இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 5:14 pm
சகோதரனைத் திருக்கை மீன் வாலால் தாக்கி காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
May 14, 2025, 2:47 pm