
செய்திகள் மலேசியா
தெலுக் இந்தான் சாலை விபத்தில் பலியான சேமப்படை அதிகாரி சார்ஜன் எஸ். பெருமாளுக்கு பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் இறுதி மரியாதை செலுத்தினார்
ஈப்போ:
தெலுக் இந்தான் சாலை விபத்தில் 9 சேமப்படை அதிகாரிகள் உயிரிழந்த நிலையில் அதில் ஓர் இந்தியரான சார்ஜன் எஸ். பெருமாளும் மரணமடைந்தார்.
அன்னாரின் உடலுக்கு பேராக் மாநில சுகாதாரம், இந்திய விவகார பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு அ.சிவநேசன் ஆறுதல் கூறினார். இந்நிலையில் இன்னும் 4 சேமப்படை வீரர்கள் தெலுக் இந்தான் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அ.சிவநேசன் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், மரணமடைந்த சேமப்படை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் தம்முடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாக சிவநேசன் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 5:14 pm
சகோதரனைத் திருக்கை மீன் வாலால் தாக்கி காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
May 14, 2025, 2:47 pm