நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் அன்னையர் தின விழாவும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறையும் சிறப்பாக நடைபெற்றது 

ஈப்போ:

ஈப்போ ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் அன்னையர் தின விழாவும் செயற்கை நுண்ணறிவு பயிற்சியும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தாயின் பெருமைகளையும் தியாக உணர்வுகளையும் பேரா மாநில ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயணன் எடுத்துரைத்தார்.

அதன் பிறகு நடந்த செயற்கை நுண்ணறிவுப் பற்றிய விளக்கத்தை பத்து காஜா கிந்தா வேலி தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் முனைவர் தசரதராஜன் அண்ணாமலை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார்.

இந்நிகழ்வினை ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழுத் தலைவர் ராஜ்குமார் அதிகார்வபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேலாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

-ஆர்.பாலசந்தர் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset