
செய்திகள் மலேசியா
டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் பணி ஒப்பந்தம் நீட்டிப்பு: ஊழல் ஒழிப்பு அமைப்பின் தலைவர் கண்டனம்
கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டதை ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் எட்முன்ட் தெரென்ஸ் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பங்குகள் வாங்கிய விவகாரத்தில் நாடாளுமன்ற சிறப்பு செயற்குழுவின் கூட்டத்திற்கு டான்ஶ்ரீ அஸாம் பாக்கி வரவில்லை.
இன்று அவர் தான் நாட்டின் ஊழல் தடுப்பு தலைமை ஆணையராக இருக்கிறார். அவரின் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது எந்த விதத்தில் நியாயம் என்று எட்முன்ட் தெரென்ஸ் கேள்வி எழுப்பினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சுயேட்சையாக செயல்பட வேண்டும் என்றால் ஒரு தலைபட்சமாக செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு நடப்புக்கு வந்ததாக அரசாங்க தலைமை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 5:14 pm
சகோதரனைத் திருக்கை மீன் வாலால் தாக்கி காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
May 14, 2025, 2:47 pm