நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை முதல் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலை டன்னுக்கு RM2,600 ஆகக் குறைக்கப்படும்: முஹம்மத் சாபு

பெட்டாலிங் ஜெயா: 

நாளை முதல் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலை டன்னுக்கு RM2,600 ஆகக் குறைக்கப்படும் என்று விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மத் சாபு தெரிவித்தார். 

தேசிய அரிசி உற்பத்தி நிறுவனம், பெர்னாஸ் உடனான சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முஹம்மத் சாபு கூறினார். 

உலகளாவிய சந்தை முன்னேற்றங்கள், உணவு விநியோகச் சங்கிலியின் தொடர்ச்சியை உறுதி செய்வதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு தற்போதைய காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தக் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

நாடு முழுவதும் வெள்ளை அரிசியின் விலையைச் சரிசெய்தல் என்பது விநியோகத் திறனைத் தொடர்ந்து உறுதி செய்வதற்கும் மக்களின் வாழ்க்கைச் செலவு மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

டிசம்பர் 1 ஆம் தேதி விலைக் குறைப்புக்குப் பிறகு இது இரண்டாவது சரிசெய்தல் ஆகும், இது ஒரு மெட்ரிக் டன்னுக்கு RM3,000 இலிருந்து RM2,800 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் சபா மற்றும் சரவாக்கிற்கான பிபிஐ மானியத் திட்டம் வழக்கம் போல் தொடரும் என்றார்.

நாட்டின் பிரதான உணவு மலிவு விலையிலும், எளிதில் கிடைப்பதிலும், எப்போதும் போதுமான அளவிலும் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset