
செய்திகள் மலேசியா
சகோதரனைத் திருக்கை மீன் வாலால் தாக்கி காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
கோத்தா பாரு:
பாச்சோக்கில் வீட்டில் தனது சகோதரனைத் திருக்கை மீனின் வாலால் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக வேலையில்லாத நபர் மீது இன்று கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி சுல்கிப்ளி அப்லா முன்னிலையில் தனக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 36 வயதான முஹம்மத் இஸ்வான் சுகர்னோர் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த மே 1-ஆம் தேதி காலை 9.30 மணியளவில், Bachok Kampung Pauh Jabit Beris Kubur Besar-இல் உள்ள வீட்டில் திருக்கை மீனின் வாலைப் பயன்படுத்தி 40 வயதான முஹமத் ஃபக்ரானுக்கு வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முஹம்மத் இஸ்வான் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 மற்றும் அதே சட்டத்தின் 326ஏ பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படும்.
குற்றவியல் சட்டத்தின் 326ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்சக் காலத்தை விட இரண்டு மடங்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரர் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க துணை அரசு வழக்கறிஞர் கமருல் ஹசிமி ரோஸ்லி பரிந்துரைக்கவில்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 2:47 pm