நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

FRU அதிகாரிகள் பயணம் செய்த வாகனத்தின் செயல்பாட்டில் எவ்வித சிக்கலும் இல்லை: சைஃபுடின் நசுத்தியோன்

கோலாலம்பூர்: 

அரச மலேசிய போலீஸ் படையின் மத்திய சேமப்படை, FRU அதிகாரிகள் பயணம் செய்த வாகனத்தின் செயல்பாட்டில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அது சாலையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். 

1997-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த வாகனம் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் அதன் செயல்பாடு மீது எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார். 

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஒன்பது FRU அதிகாரிகளில் ஒருவரான டமர்ருலன் Damarrulan Abdul Latif-இன் குடும்பத்தினரை சுங்கை செனாமில் உள்ள FRU குடியிருப்பில் சந்தித்துப் பேசிய பிறகு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

லாரி ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்திற்கான காரணம் என்பதை இப்போது தீர்மானிக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டார். 

ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் பக்ரி ஜைனல் அபிடின், லாரியின் steering wheel செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்ததாக சைஃபுடின் குறிப்பிட்டார். 

அத்தகைய வாகனங்களில் சீட் பெல்ட்களை நிறுவுவது உட்பட பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது குறித்து கேட்ட போது, ​​அது சிக்கலான பிரச்சினை என்று சைஃபுடின் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset