நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல், நம்பிக்கை மோசடி உட்படுத்திய 17 குற்றச்சாட்டுகள்: டாக்டர் பி.இராமசாமி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் 

பட்டவெர்த்: 

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதி விவகாரத்தில் ஊழல், நம்பிக்கை மோசடி உட்படுத்திய 17 குற்றச்சாட்டுகள் தொடர்பாக பினாங்கு மாநில  முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சர் டாக்டர் பி.இராமசாமி இங்குள்ள பட்டவெர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இருப்பினும், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் டாக்டர் பி.இராமசாமி மறுத்து விசாரணை கோரினார். 

பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக 2010 முதல் 2023ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். 

டாக்டர் பி.இராமசாமி தலைமையின் போது  859,131.29 ரிங்கிட் அறப்பணி வாரியத்தின் நிதியானது 2019 மே மாதம் மற்றும் பிப்ரவரி 2022ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டதாகவும் இதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கவில்லை என்று தெரியவந்தது. 

மேலும், தைப்பூச தங்க ரதம் விவகாரத்தில் கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பாக 13 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. 

மருத்துவ உதவி தொடர்பாக 65 ஆயிரம் ரிங்கிட், கல்வி உதவிநிதிக்கான 15 ஆயிரம் ரிங்கிட் ஆகிய இரு குற்றச்சாட்டுகளும் பி.இராமசாமி மீது கொண்டு வரப்பட்டது. 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 409யின் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கபடலாம். 

குற்றஞ்சாட்டபட்டவருக்கு 78 ஆயிரம் ரிங்கிட் அடிப்படையில் ஜாமின் வழங்கப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset