
செய்திகள் மலேசியா
விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு 1 மாதக் கால அவகாசம் வழங்கப்படும: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
தெலுக் இந்தானில் அரச மலேசிய போலீஸ் படையின் மத்திய சேமப்படை, FRU அதிகாரிகளை உட்படுத்திய கோர விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு 1 மாதக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு விசாரணை அறிக்கையை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கச் செய்தி தொடர்பாளருமான ஃபஹ்மி குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் குற்றவியல் அல்லாத அம்சங்களை ஆராய ஒரு சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில்), இந்த விபத்து தொடர்பான காவல்துறையினரின் விசாரணை தொடர்கிறது.
எனவே, இந்தக் கோர விபத்து குறித்து இரு விசாரணை அறிக்கைகள் பெறப்படும் ன்று துணைப் பிரதமர் ஜாஹித் ஹமிடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
நேற்று தெலுக் இந்தான் ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் சாலையில் அரச மலேசிய போலீஸ் படையின் மத்திய சேமப்படை, FRU அதிகாரிகளை உட்படுத்திய கோர விபத்தில் 44 வயதான சார்ஜன் எஸ்.பெருமாள் உட்பட 9 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 5:14 pm
சகோதரனைத் திருக்கை மீன் வாலால் தாக்கி காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
May 14, 2025, 2:47 pm