நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கணக்கண்பட்டி சச்சிதானந்த சற்குரு சபையின் அன்னையர் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

ஈப்போ:

அண்மையில் இங்குள்ள செம்பிறை சங்க மண்டபத்தில்  பகவான் கணக்கண்பட்டி சச்சிதானந்த சற்குரு சபையின் ஏற்பாட்டில் அன்னையர் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

டாக்டர் லோகநாதனின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 24 ஆண்டுகளாக யோகா, நடைபயிற்சி மற்றும் பல ஆரோக்கியமான செயல்பாடுகள்  இச்சங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 ஒவ்வொருவரின் வாழ்விலும் தாய் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை ஒரு சிலர் உணர மறுக்கின்றனர் தமது தொடக்க உரையில் காணப்படும் டாக்டர் லோகநாதன் கூறினார். 

கடவுளை நாம் காணமுடியாது. ஆனால் கடவுள் வடிவத்தில் இவ்வுலகில் நம்மை பாராட்டி சீராட்டி இன்பத்திலும் துன்பத்திலும் வளர்ப்பவள் தாய் என்பதை அனைவரும் மறக்ககூடாது என்று அவர் சொன்னார்.  

அன்னையர் தினத்தின் போது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஒருவர் தாயை அன்பாகவும் அக்கறையுடனும் கவனிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். 

இந்நிகழ்வில் 33 தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. அதேவேளையில் அணிச்சல் வெட்டி அனைத்து தாய்மார்களுக்கும் வழங்கப்பட்டன. 
இந்நிகழ்ச்சியில் 500க்கும்  மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர் என்று அவர் கூறினார்.

ஈப்போவின் ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த  சார்லி 
 திதியான் தம்பதியினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து  சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி,
எஸ்.பி.எம் தேர்வில் 9ஏ தேர்ச்சி பெற்ற தீபன் ஜெயராமனும் சிறப்பிக்கப்பட்டார்.

-ஆர்.பாலசந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset