நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருளாதாரத் துறையில் நிபுணத்தும் பெற்றிருப்பதால் ரஃபிசி அதன் அமைச்சராக நியமிக்கப்படவில்லை: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து 

கோலாலம்பூர்:

பொருளாதாரத் துறையில் நிபுணத்தும் பெற்றிருப்பதால்தான்  அதன் அமைச்சராக தான் நியமிக்கப்பட்டிருப்பதை ரஃப்சி ரம்லி உணர்ந்துள்ளார் என்று அகாடமி நுசந்தராவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்தப் புரிதலின் அடிப்படையில், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்தால், பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அவர் அறிவித்துள்ளார் என்று அஸ்மி ஹசான் விளக்கமளித்தார் .  

பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தப் பின் பல பிரச்சனைகள் குறித்துச் சுதந்திரமாகக் கேள்வி எழுப்பலாம் என்று Yang Bakar Menteri நிகழ்ச்சியில் ரஃபிசி கூறியதை  அஸ்மி ஹசான் சுட்டிக் காட்டினார். 

மேலும் , தேர்தலில் வெற்றி பெற ரஃபிசி அனுதாப ஓட்டுகளைப் பெற முயற்சிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல்.  பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினராக தனது பொறுப்புகளில் கவனம் செலுத்தவும், 16-ஆவது பொதுத் தேர்தலுக்கு பிகேஆர் கட்சியைத் தயாராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தாம் எண்ணம் கொண்டிருப்பதாக ரஃபிசி கூறினார்.

இதனிடையே, பொருளாதார அமைச்சர் பதவியை ரஃப்சி முக்கியப் பதவியாகக் கருதவில்லை என்று நாட்டின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Syaza Shukri குறிப்பிட்டுள்ளார்.

பிகேஆர் கட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால் அரசாங்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த தாம் பொருளாதார அமைச்சராகச் செயல்படுவதற்கான அதிகாரத்தையும் இழக்க நேரிடும் என்று ரஃபிசி உணர்ந்திருக்கலாம் என்று Syaza Shukri கூறினார். 

இரண்டு பதவிகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், ஆளும் கட்சியிலிருந்து அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் Syaza Shukri தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset