
செய்திகள் மலேசியா
FRU அதிகாரிகளை உட்படுத்திய கோர விபத்து: லாரி ஓட்டுநருக்கு 4 நாள்கள் தடுப்புக் காவல்
தெலுக் இந்தான்:
9 அரச மலேசிய போலீஸ் படையின் மத்திய சேமப்படை, FRU அதிகாரிகளின் உயிரைப் பறித்த கோர விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ லாரி ஓட்டுநர் 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
45 வயதான லாரி ஓட்டுநரைத் தடுப்புக் காவலில் வைக்க ஹிலிர் பேரா மாவட்டக் காவல்துறை தலைவர் Asisten Komisioner Dr Bakri Zainal Abidin அனுமதி கோரினார்.
அவரின் அனுமதி விண்ணப்பத்திற்கு Majistret Naidatul Athirah Azman ஒப்புதல் வழங்கினார்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் இன்று தொடங்கி சனிக்கிழமை வரை 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்,
கவனக்குறைவாக வாகனத்தி ஓட்டி மரணத்தை விளைவித்த காரணத்திற்காக சாலை போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1) கீழ் இந்த கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, லாரி ஓட்டுநர் காலை 8.50 மணியளவில் கருப்பு சட்டை மற்றும் டிராக் பேண்ட் அணிந்தபடி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 5:14 pm
சகோதரனைத் திருக்கை மீன் வாலால் தாக்கி காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
May 14, 2025, 2:47 pm