நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாடுகளிலுள்ள மலேசியர்களுக்கான வாக்களிக்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும்: பிரதமர் அன்வார்

மாஸ்கோ: 

16-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, வெளிநாடுகளிலுள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்களின் வாக்களிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டதாக மாஸ்கோவில் புலம் பெயர்ந்த மலேசியர்களுடனான சந்திப்பில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்றும், அதன் செயல்பாடுகளில் அரசாங்கம் தலையிட முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார். 

அனைத்து மலேசியர்களும் தங்கள் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தனிப்பட்ட முறையில் ஆதரிப்பதாக அன்வார் கூறினார்.

தற்போதை அதிநவீன தளங்களுடன், தேர்தல் செயல்முறை மிகவும் வெளிப்படையானதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். 

மாஸ்கோவில் உள்ள மலேசிய தூதரகத்திற்கும் வளாகத்திற்கும் இடையே உள்ள நீண்ட தூரம் காரணமாக, தானும் பல்கலைக்கழகத்தில் உள்ள 345 மலேசிய மாணவர்களில் பலரும் கடந்த பொதுத் தேர்வில் வாக்களிக்க முடியவில்லை என்று ரஷ்யாவில் கல்வி பயிலும் ஹமிசான் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset