
செய்திகள் மலேசியா
அதிகாரப்பூர்வப் பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் அன்வார்
மோஸ்கோ:
4 நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணமாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்யா சென்றடைந்தார்.
வுனுகோவோ-2 விமான நிலையத்தை வந்தடைந்தத பிரதமர் அன்வாருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் அன்வார் அங்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் ஒரு மலேசிய பிரதமருக்கு வழங்கப்படும் இதேவே முதல் முறையாகும்.
பிரதமர் அன்வாரை ரஷ்யாவிற்கான மலேசிய தூதர் டத்தோ சியோங் லூன் லாய் வரவேற்றார்.
அதே நேரத்தில் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ ரஷ்ய அரசாங்கத்தின் சார்பாக அவரை வரவேற்றார்.
பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் சாபு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லி காங், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ ஜம்ரி அப்துல் காடீர், தோட்ட மூலப்பொருள் அமைச்சர் டத்தோஶ்ரீ ஜோஹாரி அப்துல் கானி ஆகியோர் ரஷ்யாவிற்கு சென்றுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 5:14 pm
சகோதரனைத் திருக்கை மீன் வாலால் தாக்கி காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
May 14, 2025, 2:47 pm