
செய்திகள் மலேசியா
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி
ஜார்ஜ்டவுன்:
ஊழல் குற்றம், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டு தொடர்பில் நாளை பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று அவரின் வழக்கறிஞர் கூறினார்.
பினாங்கு பட்டர்வெர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 76 வயதான பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நாளை குற்றஞ்சாட்டப்படவுள்ளார். 2009 எம்.ஏ.சி.சி சட்டத்தின் செக்ஷன் 23(1) டாக்டர் இராமசாமி மீது குற்றஞ்சாட்டப்படுகிறது
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எம்.ஏ.சி.சி எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தனக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி மறுத்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்து அறப்பணி வாரியத்தில் சுயேட்சை தணிக்கை தரப்பால் கண்டுப்பிடிக்கப்பட்ட சில ஆவணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைத்திடம் நடப்பு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரான RSN RAYER வழங்கினார்.
கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டார். பிறகு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்கினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 12:50 am
இலக்கவியல் துறையில் முன்னோடியாகத் திகழ மலேசியா பாடுபடுகிறது: கோபிந்த் சிங்
May 14, 2025, 12:44 am
அன்னையர்களின் தியாகங்கள் விலை மதிப்பற்றது; போற்றி பாராட்டப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
May 14, 2025, 12:36 am
பேராசிரியர் ராமசாமி மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்: எம்ஏசிசி வட்டாரம்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
May 13, 2025, 5:26 pm
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல்
May 13, 2025, 5:10 pm