
செய்திகள் மலேசியா
அன்னையர்களின் தியாகங்கள் விலை மதிப்பற்றது; போற்றி பாராட்டப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
பட்டர்வொர்த்:
அன்னையர்களின் தியாகங்கள் விலை மதிப்பற்றது. போற்றி பாராட்டப்பட வேண்டும்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 2025 அன்னையர் தின கொண்டாட்டம் பட்டர்வொர்த்தில் உள்ள கிராவ்ன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது.
தாய்மார்கள் மீதான அன்பும் பாராட்டும் நிறைந்த சூழலில்,
நாடு முழுவதிலுமிருந்து 500க்கும் மேற்பட்டோரை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.
டத்தோஸ்ரீ தனேந்திரன், டத்தின்ஸ்ரீ வேனி தனேந்திரன் தலைமையில் இம்மாபெரும் விழா நடைபெற்றது.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, செனட்டர் லிங்கேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களான அன்னை பாய் ஷி யின், பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவின் முக்கிய அங்மாக ஐந்து தாய்மார்களின் தியாகம், அர்ப்பணிப்பு, அவர்களின் குடும்பங்கள், சமூகங்களில் அசாதாரண பங்களிப்பிற்காக சிறப்பு செய்யப்பட்டனர்.
இந்தக் கொண்டாட்டம் தாய்மார்களின் தியாகங்களைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல்,
நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் கட்சி உறுப்பினர்களிடையே நட்புறவை வலுப்படுத்துகிறது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 12:50 am
இலக்கவியல் துறையில் முன்னோடியாகத் திகழ மலேசியா பாடுபடுகிறது: கோபிந்த் சிங்
May 14, 2025, 12:36 am
பேராசிரியர் ராமசாமி மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்: எம்ஏசிசி வட்டாரம்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm