நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்

கோலாலம்பூர்:

தீயணைப்பு நிலைய பின்னணியில் எரியும் கட்டுப்பாடான தீயின் முன் தனது திருமணக்காட்சியில் மணமகளை தூக்கி நிற்கும் தீயணைப்புப் பணியாளரின்  விசித்திரமான காணொலி டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.

tpaitrbng_ என்ற பயனரால் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில், ஒருவர் தனது மனைவியை தூக்கிக்கொண்டு நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் தருணங்கள் பதிவாகியுள்ளன. 

இது அந்நபரின் திருமணத்திற்கு முன் எடுக்கப்பட்ட  இக்காணொலி இப்போது மீண்டும் வைரலாகி உள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் அல்லாதவர்களும் இதேபோன்ற படப்பிடிப்பைச் செய்ய முடியுமா என்று பொது மக்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதுவே மிருக்காட்சிசாலையில் வேலை செய்தால், புகைப்படத்திற்கு பின் ஓராங் ஊத்தான் இருக்குமா என்று ஒரு பயனர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். 

இந்தக் காணொலி 1.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset