நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராசிரியர் ராமசாமி மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்: எம்ஏசிசி வட்டாரம்

கோலாலம்பூர்:

பேராசிரியர் ராமசாமி மீது கிட்டத்தட்ட 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என எம்ஏசிசி வட்டாரங்கள் கூறுகிறது.

பினாங்கு மாநிலத்தின் முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

இந்நிலையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இருந்தபோது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துடன் தொடர்புடைய 17 குற்றச்சாட்டுகளின்கீழ்  இன்று பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஒரு வட்டார தகவல் அடிப்படையில் 13 குற்றச்சாட்டுகள் தங்க ரதங்களை வாங்குவது தொடர்பானவை.

மற்ற நான்கு குற்றச்சாட்டுகள் வாரியத்தின் கீழ் கல்வி உதவி, மருத்துவ உதவியை அங்கீகரிப்பது தொடர்பானவை என அத்தகவல்கள் கூறுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset