நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ அன்வாரின் உத்தரவுக்கு இணங்க ரபிசியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்

ஈப்போ:

பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வாரின் உத்தரவுக்கு இணங்க ரபிசியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

கட்சியி துணைத் தலைவர் ரபிசி ரம்லி எனக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் நான் அமைதியாக இருக்க முடிவு எடுத்துள்ளேன்.

உட்கட்சி தாக்குதல்களைத் தடை செய்யும் கட்சியின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு இம்முடிவை எடுத்துள்ளேன்.

மேலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கட்சி உறுப்பினர்களாகிய ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

எனவே, அந்தக் கேள்விக்கும் குற்றச்சாட்டுக்கும் என்னால் பதிலளிக்க முடியாது.

மேலும்  மற்றொரு கட்சி உறுப்பினரைத் தாக்கியதற்காக நான் குற்றம் சாட்டப்படலாம்,
 
பேரா கெஅடிலான்  தலைவர்களைச் சந்தித்த பிறகு டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் ரபிசியின் விமர்சனம் அவரது நற்பெயரைப் பாதிக்குமா என்று கேட்டபோது,   

கெஅடிலான் உறுப்பினர்களுக்கு நான் புதியவரா அல்லது அனுபவம் வாய்ந்தவரா என்பது தெரியும்.

குறிப்பாக நான் நீண்ட காலமாக மத்திய செயற் குழுவில் உள்ளேன். கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் சேவையாற்றி உள்ளேன்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset