நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

தெலுக் இந்தான்: 

குடும்பத்தோடு சித்திரா பௌர்ணமி விழாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த 44 வயதான சார்ஜன் எஸ்.பெருமாள் FRU அதிகாரிகளை உட்படுத்திய கோர விபத்தில் மரணமடைந்தது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சார்ஜன் எஸ்.பெருமாள் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் சித்திரா பௌர்ணமி விழாவைச் சென்று காணத் திட்டமிட்டிருந்தார்.

இருப்பினும், தனது இரு மகள்களில் ஒருவர் ஆட்சிசம் குறைப்பாடு உள்ளவர் என்ன்பதால் கூட்ட நெரிசலில் அவளைக் கவனித்துக் கொள்ள கடினமாக இருக்கும் என்று அவர் மனைவி கூறியதையடுத்து அவர் பணிக்குச் சென்றதாக மறைந்த சார்ஜன் எஸ்.பெருமாளின் தம்பி எஸ்.ஹரேந்திரன் கண்ணிர் மல்க தெரிவித்தார். 

தனது சகோதரரை கடந்த சனிக்கிழமை கடைசியாக சந்தித்ததாகவும் விபத்தில் மாண்டதை அறிந்ததும் மனம் உடைந்து போனதாகவும் எஸ்.ஹரேந்திரன்  குறிப்பிட்டார். 

விபத்து குறித்து கேள்வியுற்றதும் அவருக்கு பலத்த காயம் மட்டுமே ஏற்பட்டிருக்கலாம் என்று தாம் நினைத்ததாகவும் அவர் வேதனையாகத் தெரிவித்தார். 

முன்னதாக, தெலுக் இந்தான் ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் சாலையில் அரச மலேசிய போலீஸ் படையின் மத்திய சேமப்படை, FRU அதிகாரிகளை உட்படுத்திய கோர விபத்தில் 44 வயதான சார்ஜன் எஸ்.பெருமாள் உட்பட 9 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset