நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள், போலி துப்பாக்கி வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: யூசோப்பை விடுவிக்குமாறு வழக்கறிஞர் கோரிக்கை

கோலாலம்பூர்:

முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசுப் ராவ்தர் போதைப்பொருள் வைத்திருந்தார் அல்லது அவரது காரில் கண்டுபிடிக்கப்பட்ட போலி துப்பாக்கியைப் பற்றி அறிந்திருந்தார் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.

இதனால் அவர் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள அழைக்கப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளில், போலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் உள்ளன.

மேலும் யூசுப்பிற்கு எதிராக பாரபட்சத்தை ஏற்படுத்தியதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறியது.

யூசோப்பை சிக்க வைப்பதற்காக போதைப்பொருட்களும் போலி துப்பாக்கியும் வேண்டுமென்றே வைக்கப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி சார்புடைய ஆதாரங்களை வழங்கியதாகவும் வழக்கறிஞர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset