
செய்திகள் மலேசியா
இலக்கவியல் துறையில் முன்னோடியாகத் திகழ மலேசியா பாடுபடுகிறது: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
இலக்கவியல் துறையில் முன்னோடியாகத் திகழ மலேசியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவ மாநாட்டை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நாடு முழுவதிலுமிருந்து தனியார் நிறுவன உயர் அதிகாரிகளும், நிறுவனத்தினரும் இந்தத் தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர், நம்பிக்கையுடன் கூடிய, பொறுப்பாற்றல் மிக்க, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய இலக்கவியல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கும் கடப்பாட்டில் மலேசியா உறுதியாக உள்ளது.
உலக பொருளாதார மன்றம் நுண்ணறிவு காலம் என குறிப்பிடும் கால கட்டத்திற்குள் மலேசியா நுழைவதை இலக்காக கொண்டுள்ளது.
இக்காலகட்டம் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி, உயிரியல் தொழில்நுட்பம், மேம்பட்ட இணைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவான ஒரு யுகம்.
மேம்பட்ட இணைப்புத் தொழில் நுட்பங்களின் இணைவு மூலம் உருவாகும் இந்த புதிய காலத்தில், நம்பிக்கை என்பது முழு அமைப்பின் செயல்பாட்டை இயங்கச் செய்யும் அடித்தளமாகும்.
இந்த மாற்றம் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தப் புரட்சியில் சமூகங்கள் எவ்வாறு வாழ்கின்றன, பொறுப்புகளை ஏற்கின்றன, தொழில்நுட்பத்தை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதை மறுவரையறை செய்கின்றது.
இந்த மாற்றத்தை முன்னெடுப்பதில், தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம், அதன் ஆறு நிபுணத்துவம் வாய்ந்த குழுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த குழுக்கள் அரசாங்கம், தொழில், கல்வி மற்றும் சமூக அமைப்புகளின் 170க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சுதந்திரம், ஒழுங்குமுறை, நெறிமுறைகள், பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டை சார்ந்தத் திட்டங்களை உருவாக்குகின்றன.
ஆசியான் நாடுகளுடன் நம்பிக்கையுடன் கூடிய சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை விரிவுபடுத்துவதில் கோபிந்த் சிங் ஆர்வம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 12:44 am
அன்னையர்களின் தியாகங்கள் விலை மதிப்பற்றது; போற்றி பாராட்டப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
May 14, 2025, 12:36 am
பேராசிரியர் ராமசாமி மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்: எம்ஏசிசி வட்டாரம்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm