நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரா பௌர்ணமி: டத்தோ சிவக்குமார் சிறப்பு வருகை

கிள்ளான்
ஆன்மீக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சித்திரா பௌர்ணமி விழா போர்ட் கிளாங் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் மிக விமர்சையாக நடந்தது. இதில் மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள், சமய இயக்கங்களில் பேரவையின் தலைவர் டத்தோ ந, சிவக்குமார் கலந்து சிறப்பித்தார்.

போர்ட் கிள்ளான், மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஒரு தனித்துவமான அங்கம் வகிக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் இந்தியர்களின் முக்கியக் குடியேற்ற நுழைவாயிலாக இருந்த இப்பகுதியில், காங்காணி முறையின் கீழ் பலர் தோட்டத் துறைகளில் கூலி வேலைக்காக கொண்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். 

அதன் பின்னர் பிரிட்டிஷ் ஆதரவுடன், மலேசியாவின் வளர்ச்சிக்கு தூணாய் நின்ற இந்தியர்கள் தங்கள் தங்கிய இடங்களில் கோவில்களை கட்டி, வழிபாடு செய்து சமூக ஒற்றுமைக்கு வழிவகுத்தார்கள் என சிவக்குமார் குறிப்பிட்டார்.

இந்தத் தலங்களிலேயே, முருகப் பெருமானின் வேல் ஆன்மீக வாழ்க்கையின் மையமாக உருவானது.  வழிபாட்டு மரபுகள், ஆகம முறைகள் என இவை அனைத்தும் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மீக முதுகெலும்பாக அமைந்தன.

சித்திரா பௌர்ணமி, இறை அருளையும், ஆன்மீக புதுப்பிப்பையும், பக்தியில் அசைக்க முடியாத உறுதியையும் நினைவூட்டும் ஒரு புனிதமான நாள். இந்த விழாவில் பங்கேற்றபோது, அங்கிருந்த பக்தர்களின் தீவிரமான நம்பிக்கையும், கோவில் நிர்வாகத்தின் ஊக்கமான அர்ப்பணிப்பும் மிகுந்த உற்சாகத்தை தமக்கு வழங்கியதையும் டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்..

முருகப்பெருமானின் திருவருள், அனைவருக்கும் ஒற்றுமை, வலிமை மற்றும் தர்மத்தின் பாதை நோக்கி வழிகாட்டட்டும் என மகிழ்ச்சி தெரிவித்தார்.

தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset