நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னியல் சிகரெட் தவறாக பயன்படுத்துவதைக் கண்டறிய சிறப்பு செயற்குழு தோற்றுவிப்பு

கோலாலம்பூர்: 

மின்னியல் சிகரெட் தவறாக பயன்படுத்துவதைக் கண்டறிய சிறப்பு செயற்குழு ஒன்று தோற்றுவிக்கப்பட்டதாக நாட்டின் சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார். 

மின்னியல் சிகரெட் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் தவறாக பயன்படுத்தப்படுவதைக் கண்டறிவதை அமைச்சு உறுதி செய்துள்ளது. 

இந்த சிறப்பு செயற்குழுவிற்கு சுகாதர அமைச்சின் துணை தலைமை இயக்குநர் டாக்டர் இஸ்முனி பொஹாரி தலைமையேற்றுள்ளார். 

2024 புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களின் கட்டுபாட்டு சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்த சிறப்பு செயற்குழு தோற்றுவிக்கப்பட்டது. 

பொது சுகாதாரத்தை முன்னிருத்தி மின்னியல் சிகரெட் பயன்பாட்டினை குறைக்கவும் நடப்பில் உள்ள மின்னியல் சிகரெட் தொடர்பாக மதிப்பீடு செய்யவும் இந்த செயற்குழு உதவும் என்று அமைச்சர் விவரித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset