நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநிலம் சபா மக்களுக்கே என்ற கொள்கை என்னவானது ? தேசிய கூட்டணி தலைவர் கேள்வி 

கோலாலம்பூர்: 

சபா மாநிலம் சபா மக்களுக்கே என்ற கொள்கை என்னவானது என்று சபா மாநில தேசிய கூட்டணி தலைவர் ரொனால்ட் கியான்டி கேள்வி எழுப்பினார். 

நடப்பு அரசியல் சூழலில் GRS, PH,BN ஆகிய அரசியல் கூட்டணிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

சபா மாநிலத்தை உள்ளூர் கட்சி மட்டுமே ஆள வேண்டும் என்று மாநில அரசியலில் என்ற பலம் கொண்ட கொள்கை இருந்தாலும் அதனை எல்லாம் 24 மணிநேரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் மாற்றிவிட்டதாக ரொனால்ட் சாடினார். 

GRS அரசியல் கூட்டணி, மத்தியில் ஆளும் BN-PH அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேர்கிறதா இல்லையா என்பது GRS கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் கூறினார். 

முன்னதாக, PH,BN கூட்டணி GRS கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset