நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தானில் பயங்கர சாலை விபத்து: எட்டு எஃப்.ஆர்.யூ அதிகாரிகள் பலி

தெலுக் இந்தான்: 

FRU அதிகாரிகளை ஏற்றி சென்ற வாகனம் ஒன்று கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு FRU அதிகாரிகள் பலியான வேளையில் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநரும் மரணமடைந்தார். 

இந்த சம்பவம் தெலுக் இந்தானில் உள்ள ஜாலான் சிக்குஸ்- சுங்கை லம்பாம் எனும் பகுதியில் நிகழ்ந்தது 

இந்த விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைகாக தெலுக் இந்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காலை 8.54 மணிக்கு தங்கள் தரப்புக்கு விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாகவும் இதுவரை எட்டு FRU அதிகாரிகள் பலியானதாக பேராக் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் சயானி சைடோன் கூறினார். 

OP CHARIOT நடவடிக்கையை முடித்துக்கொண்டு அவர்கள் ஈப்போவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரிகிறது. 

விபத்தில் பலியான எட்டு உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset