நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயாவில் காணாமல் போன பமெலா லிங் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்றிருக்கலாம்: புத்ராஜெயா போலீஸ் தகவல் 

புத்ராஜெயா: 

மமெலா லிங் காணாமல் போன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் துரித விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 

மேலும், தேடப்பட்டு வரும் நபர் வெளிநாட்டிற்குத் தப்பித்து சென்றிருக்கலாம் என்று புத்ராஜெயா காவல்துறை ஆருடம் கூறியது. 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை தொடங்கிய நிலையில் சம்பந்தப்பட்ட பெண் வெளிநாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதாக புத்ராஜெயா போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முஹம்மத் கூறினார். 

பமெலா லிங்கைத் தேடும் நடவடிக்கையாக இதுவரை 27 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. மேலும், பமெலா லிங் பிள்ளைகளிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்தது. 

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏசி.சி அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் டத்தின்ஶ்ரீ பமெலா லிங் காணாமல் போனார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset