நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யானை குட்டி உயிரிழப்பு : இடத்தை விட்டு நகராத தாய் யானை

கிரிக்

பேரா கிரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், ஒரு ஐந்து வயது யானை குட்டி லாரியால் மோதப்பட்டு உயிரிழந்தது.

குட்டியின் தாய் யானை, இடத்தில் இருந்து நகர மறுத்து, அதன் உடலை நோக்கி சோகத்தில் நிற்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.  விடியற்காலம் வரை அங்கிருந்து நகராமல் இருந்த அந்த யானை, அந்த லாரியையும் தள்ள முயற்சித்ததும் அக்காட்சியில் பதிவாகியுள்ளது

இதனிடையே வன விலங்கு அதிகாரிகள் விரைந்து வந்தும், அந்த தாய் யானையை நகர்த்த முடியவில்லை. அது தன் குட்டியின் மரணத்தை ஏற்க முடியாமல் தவித்தது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வன விலங்கு பகுதிகளில் வாகனம் ஓட்டும் பயணிகள், விலங்குகளில் பாதுகாப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டுமென இச்சம்பவத்தை காணொலி வாயிலாக பார்வையிட்ட இணையத்தள வாசிகள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்

தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset