நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நுருல் இசாவின் போட்டி அன்வாருக்கானது அல்ல:  சைஃபுதீன் விளக்கம்

பெட்டாலிங் ஜெயா: 

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான நுருல் இசா அன்வாரின் போட்டியை, கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிமின் மதிப்பை பிரதிபலிப்பதாக பார்வையிட வேண்டாம் என உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசாதியோன் இஸ்மாயில்,  வலியுறுத்தியுள்ளார்.

நுருல் இசா வெல்வதையும் தோல்வியடைவதையும் அன்வாருக்கான ஆதரவு; அல்லது மறுப்பு என தாம் பார்க்கவில்லை என குறிப்பிட்ட அவர், இது ரஃபிஸிக்கும் நுருல் இசாவும் இடையே உள்ள நேரடி போட்டி மட்டுமே என்றார்.

முன்னதாக நூருல் இசாவிற்கு கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென ரஃபிஸி ரம்லி கூறினார். நூருல் இசா தோல்வி அடைந்தால், அது பிரதமர் அன்வாரின் மீதான நம்பிக்கையை கேள்விகுறியாகுமென அவர் சுட்டிக் காட்டியிருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு பிகேஆர் கட்சியின் துணைத் பதவியை ரஃபிஸி வென்றார்; நூருல் இசா அத்தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது, நியமனம் பெற்ற உதவித் தலைவராக உள்ளார்.

இதனிடையே பிரிவினைக்கு பதிலாக ஒற்றுமையை நோக்கி நகரவேண்டும் என்பதே தம்முடைய நம்பிக்கை என ரசாதியோன் இஸ்மாயில் குறிப்பிட்டார். அதோடு தேர்தலை  இரண்டு பிரிவுகளாக பார்க்கக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset