நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தானில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் பலியான கலகத்தடுப்பு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஐ.ஜி.பி இரங்கல் 

கோலாலம்பூர்: 

பேராக் தெலுக் இந்தானில் இன்று காலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் எட்டு கலகத்தடுப்பு அதிகாரிகள் மரணமடைந்தனர். 

மரணமடைந்த கலகத்தடுப்பு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார். 

இந்த பயங்கர சாலை விபத்து சம்பவத்தை எண்ணி போலீஸ் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அவர் கூறினார். 

இந்நிலையில் மரணமடைந்த கலகத்தடுப்பு பிரிவு அதிகாரிகளின் குடும்பங்களின் நலன்களில் அக்கறை செலுத்தப்படும் என்று டான்ஶ்ரீ ரஸாருடின் உத்தரவாதம் அளித்தார். 

முன்னதாக, இன்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் எட்டு கலகதடுப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர். உடல்கள் யாவும் உடற்கூறு ஆய்வுக்காக தெலுக் இந்தான் மருத்துவமமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset