நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமூகத்தின் ஏமாற்றம் நிறைந்த தலைவராக பார்க்கப்படுகிறார்: பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி சாடல் 

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமூகத்தின் ஏமாற்றம் நிறைந்த தலைவராக பார்க்கப்படுவதாக உரிமை கட்சி சாடியுள்ளது. 

நம்பிக்கை கூட்டணிக்கு மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவுகள் மோசமாக இருப்பதாக பிகேஆர் துணைத்தலைவர் ரஃபிசி ரம்லி கூறியதை மேற்கோள் காட்டி பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி இவ்வாறு கூறினார். 

DAP மற்றும் PKR கட்சியில் உள்ள இந்திய பிரதிநிதிகள் பலரும் இந்தியர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அக்கறை கொள்ளவில்லை. 

நிலைமை இவ்வாறு தொடர்ந்தால் அடுத்த பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா என்பது கேள்விக்குறியே என்று உரிமை கட்சி சொன்னது. 

ஒருவேளை தேசிய கூட்டணி மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவினை பெருக்கினால் தேசிய அரசியல் நீரோடையில் அரசியல் மாற்றத்தை நாம் காண முடியும் என்று அவர் சொன்னார். 

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் இந்தியர்களை புறக்கணித்து  விட்டதாக இந்தியர்கள் பெருமளவில் கருதியுள்ளனர்.  இந்திய சமூகத்திற்கு இது பெருத்த ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset