நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அபாயகரமாக காரை செலுத்தி கணவன் - மனைவியை மோதிய வழக்கு: இந்திய ஆடவருக்கு 30 நாட்கள் சிறை, 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் 

கோலாலம்பூர்: 

அபாயகரமாக காரை செலுத்தி கணவன் - மனைவியை மோதிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய ஆடவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை, 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

கடந்த சனிக்கிழமை பிளஸ் நெடுஞ்சாலையின் டூத்தா டோல் சாவடிக்கு முன்னே கணவன் - மனைவி பயணித்த மோட்டார் சைக்கிளை மோதி குற்றஞ்சாட்டப்பட்டவர் விபத்தினை ஏற்படுத்தினார். 

1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 42(1)இன் கீழ் இந்திய ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது 

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி கைருனிசாக் ஹஸ்னி தீர்ப்பளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset