
செய்திகள் மலேசியா
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் GRS- BN- PH கூட்டணிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும்: ஜேம்ஸ் சின் கருத்து
கோலாலம்பூர்:
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் GRS-BN-PH அரசியல் கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திப்பார்கள்.
சபா மாநிலத்தில் முன்னணி கட்சியாக விளங்கும் GRS அரசியல் கூட்டணி, தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி மேற்கொள்ளும்.
அத்துடன் சில சட்டமன்ற தொகுதிகளில் ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு கொள்ளும் சூழல் ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின் கூறினார்.
GRS கட்சியின் முக்கிய பங்காளியாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி விளங்குகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, GRS கட்சி சபா மாநிலத்தில் தனித்தே போட்டியிடும் என்று அறிவித்தது.
அதே நேரத்தில் சபா மாநில தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்திக்கும் என்று இரு கட்சிகளும் கூட்டாக அறிவித்தனர்.
இருப்பினும், GRS-BN-PH ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தலில் இணைந்து களம் காண வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 3:44 pm
மின்னியல் சிகரெட் தவறாக பயன்படுத்துவதைக் கண்டறிய சிறப்பு செயற்குழு தோற்றுவிப்பு
May 13, 2025, 2:08 pm
சபா மாநிலம் சபா மக்களுக்கே என்ற கொள்கை என்னவானது ? தேசிய கூட்டணி தலைவர் கேள்வி
May 13, 2025, 1:26 pm
யானை குட்டி உயிரிழப்பு : இடத்தை விட்டு நகராத தாய் யானை
May 13, 2025, 12:59 pm
நுருல் இசாவின் போட்டி அன்வாருக்கானது அல்ல: சைஃபுதீன் விளக்கம்
May 13, 2025, 12:17 pm