நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிலுள்ள ஒன்பது மாநிலங்களில் இடி மின்னல், கடுமையான மழை: மெட் மலேசியா தகவல் 

கோலாலம்பூர்: 

நாட்டிலுள்ள ஒன்பது மாநிலங்களில் இடி மின்னல், கடுமையான மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

பினாங்கு, பெர்லீஸ், கெடா ( லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கொ செனா, யான், பெண்டாங், கோல மூடா), பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் கடுமையான மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

மேலும், கூட்டரசு பிரதேசம் லாபுவான் மற்றும் சபா மாநிலங்களின் சில இடங்களிலும் மோசமான வானிலை ஏற்படும் என்று மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்தது. 

நாட்டின் அண்மைய வானிலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள பொதுமக்கள் மெட் மலேசியாவின் சமூக ஊடகங்களை வலம் வர கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset