
செய்திகள் மலேசியா
மடானி மலேசியாவின் குரல் உரக்க ஒலிக்கச் செய்யும் நோக்கில் கெஅடிலான் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
மடானி மலேசியாவின் குரல் உரக்க ஒலிக்கச் செய்யும் நோக்கில் கெஅடிலான் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.
தொகுதி, மாநில, மத்திய மட்டங்களில் அதிகாரப் பகிர்வு செயல்பாட்டில் அனைத்து இனங்களையும் முன்னுரிமைப்படுத்தி கொண்டாடும் ஒரே கட்சி கெஅடிலான் கட்சி தான்.
இதன் அடிப்படையில் தான் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
மேலும் பல்லினக் கட்சியான கெஅடிலான் சமூகத்தின் அனைத்து மட்டங்களின் குரல்கள், உரிமைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கெஅடிலான் உறுப்பினர்களின் குரல்களை கட்சித் தலைமையின் பிரதான நீரோட்டத்தில் கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, நீதி, சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன்.
அரசியலமைப்பு, ருக்குன் நெகாராவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,
மலேசியர்களின் பன்முகத்தன்மையை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முற்போக்கான அரசியல் தளமாக கெஅடிலான் அதன் பங்கை வலுப்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
இந்தப் போராட்டத்தில் அனைத்து கெஅடிலான் உறுப்பினர்களும் ஒரே அணியாக அதாவது அன்வார் இப்ராஹிம் அணியில் ஒன்று சேர வேண்டும்.
இந்தத் தேர்தல் வெறும் தலைமையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல.
இவ்வளவு காலமாக நாம் அனைவரும் கடைப்பிடித்த சீர்திருத்தக் கொள்கைகளைப் பராமரிப்பதில் கட்சியின் திசையைத் தீர்மானிக்க வேண்டும்.
மேலும் பிரதமரு. கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமை நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர உதவுவது இத்தேர்தலில் முக்கிய நோக்கம் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்