நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகள் இலக்கியப் பயிலரங்கும் தேசிய அளவிலான போட்டியும் நடைபெறும்: எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் உறுதி

கோலாலம்பூர்: 

மலாய் சீன மொழிகளில் இருப்பது போல தமிழ் மொழியிலும் அதிகமான குழந்தைகள் இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்று எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் கேட்டுக் கொண்டார். 

நாடு தழுவிய நிலையில் பயிற்சிகள் நடத்தி தேசிய அளவிலான போட்டி நடத்தப்படும் என்றார் அவர்.  

போட்டியில் வெற்றிபெறும் கதைகள் புத்தகமாக்கப்பட்டு அந்தப் புத்தகங்கள்   தமிழ்ப்பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் வழங்கப்படும். 

தமிழ் இலக்கியம் அதிகமாகப் படைக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தை முன்வைத்து, தேசிய நூலகத்தின் ஆதரவோடு  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த சிறார் குழந்தைகள் படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கான பயிலரங்கில் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் திரளாக கலந்து கொண்டனர். 

அனைத்துத் தரப்பினரிடமிருந்து கிடைத்துள்ள வரவேற்பு குழைந்தைகள் படைப்பிலக்கியத்தை அதிகரிக்கும் இலக்கில் பயணிக்க  உழைக்க புது உற்சாகம் என்று மோகனன் தெரிவித்தார்.

மலேசிய தேசிய நூலகமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் கடந்த சனிக்கிழமை இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பயிலரங்கை ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தேசிய நூலகத்தின் தலைமை இயக்குநர் எடி இர்வான் சூழ்கிப்ளி அவர்களின்  பிரதிநிதியாக துணை தலைமை இயக்குநர் அனிசாதுல் வாஹிடா கலந்து சிறப்பித்தார்.

குழந்தை இலக்கிய பயிலரங்கில் முன்னோடி பெரியவர் முரசு நெடுமாறன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நமது  சமகாலத்தில் அதிகமான குழந்தை இலக்கியங்களை படைத்து வரும் ஆசிரியர், எழுத்தாளர், பயிற்சியாளர் என பன்முக தன்னை கொண்ட பாலமுருகன் அவர்கள் வழிகாட்டி பயிலரங்கை நடத்தினார்.

பயிலரங்கும் போட்டியும்

இது ஒரு தொடக்கம். சரியான திட்டமிடலுடன் நாடு தழுவிய நிலையில் குழந்தைகள் இலக்கியப் பயிலரங்கை நடத்தி, இளைய தலைமுறையினரையும் மூத்த எழுத்தாளர்களையும் குழந்தை இலக்கியம் படைக்க ஊக்கிவிக்கும் வகையில் தேசிய அளவிலான போட்டி நடத்தப்படும்.

போட்டியில் வெற்றி பெறும் கதைகளை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புத்தகமாக்கி அதனை தமிழ்ப் பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் வழங்கும். 

அதன் வழி மலாய் சீன மொழியில் இருப்பது போலவே தமிழ் மொழியிலும் அதிகமான குழந்தை இலக்கியம் படைக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.

"குழந்தைகள் இலக்கியத்தில் கவனம் செலுத்தும் ஒரு சமூகம் தான், அடுத்த தலைமுறையில் தரமான இலக்கிய படைப்பாளர்கள், வாசகர்கள், விமர்சகர்களை உருவாக்க முடியும். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள இந்த நீண்ட கால திட்டத்திற்கு என்னால் ஆன எல்லா ஆதரவையும் வழங்குவேன்" என்று பயிற்சியாளர்  பாலமுருகன் குறிப்பிட்டார்.

இந்தப் பயிலரங்கிற்கு சிறப்பு ஏற்படுத்த வகையில் மாணவிகள்  கிஷாந்தினி சுப்ரமணியம். கிர்திஷா ராமசந்திரன்ஆகியோர் சிறப்பு நடனங்களை வழங்கினர். அவர்கள் இருவருக்கும் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்தப் பைலரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு மன்னர் மன்னன் அவர்களும் பாலமுருகன் அவர்களும் நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.

இளையோர் படைப்பிலக்கிய பயிலரங்கின் சிறப்பு அங்கமாக 86 வயதில் நூல் வெளியீடு செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் எழுத்தாளர் துளசி சுந்தரம் அவர்களுக்கு, துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset