நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் பிரச்சினையில் மஇகாவை சாடியிருப்பது ரபிசியின் முட்டாள்தனத்தையும் அரசியல் முதிர்ச்சியின்மையையும் காட்டுகிறது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்: 

கெஅடிலான் பிரச்சினையில் மஇகாவை சாடியிருப்பது ரபிசியின் முட்டாள்தனத்தையும் அரசியல் முதிர்ச்சியின்மையையும் காட்டுகிறது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கெஅடிலான் துணைத் தலைவர் ரபிசி ரம்லி அதன்  தகவல் பிரிவு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனை நோக்கி மஇகாவை குறிவைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும்  அவரது சொந்தத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் அடித்தளத்தை நினைவுபடுத்துகிறார்.

ரபிசியின் செயல்களை விமர்சித்த டத்தோஸ்ரீ சரவணன், இது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை தெளிவான வெளிப்பாடாகும்.

டத்தோஸ்ரீ அன்வாரின் அரசியல் வாழ்க்கை அம்னோவுடன் தொடங்கியது என்பதை ரபிசிஅறிந்திருக்க வேண்டும்.

முன்னதாக, கெஅடிலான் நிலவி வரும் குழப்பம் மஇகாவுடனான அவரது கடந்த கால அனுபவங்களில் வேரூன்றியதாகக் கூறி ரபிசி, ரமணனை சாடியுள்ளார்.

நான் அவரைக் குறை சொல்ல முடியாது.  

ஒருவேளை கெஅடிலான், மஇகாவின் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றால் அவர் குழப்பமடைந்திருக்கலாம்.

ரபிசியின் தலைமைத்துவ திறன்கள் குறித்து தற்போது கேள்வி எழும்பியுள்ளது.

கெஅடிலானை திறம்பட நிர்வகிக்க டத்தோஸ்ரீ அன்வார், சக கட்சி உறுப்பினர்களுடன் அவர் ஒத்துழைக்கவ வேண்டும்.

மஇகாவின் முறையாக நிறுவப்பட்ட அமைப்பு. வளமான வரலாற்று மரபு, மலேசியா உருவாவதில் அதன் முக்கிய பங்கை ஒப்புக்கொள்வது அவசியம்.

மேலும் மஇகா இந்திய சமூகத்தின் சட்டப்பூர்வமான பிரதிநிதி. அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுகிறது

இன நல்லிணக்கத்தை மேம்படுத்துகிறது. அவர்களின் அரசியல், சமூக கவலைகளை நிவர்த்தி செய்கிறது.

குறிப்பாக மலேசியாவின் அரசியலில் மஇகாவின் பங்களிப்புகள் மறுக்க முடியாதது.

மேலும் ரபிசி கூட்டணி அரசாங்கத்திற்குள் உள்ள கட்சிகளை பகிரங்கமாக கேலி செய்வது பொருத்தமற்றது என்று டத்தோஸ்ரீ சரவணன் மேலும் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset