
செய்திகள் மலேசியா
சபா மாநில சட்டமன்ற தேர்தல்: ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைக்க வேண்டும்
கோத்தா கினாபாலு:
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சபா மாநில ஜி.ஆர்.எஸ் கூட்டணியின் தலைவரும் முதலமைச்சருமான டத்தோஶ்ரீ ஹஜிஜி நோருடன் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அம்னோ, தேசிய முன்னணி, ஜி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகளுடன் அரசியல் ஒத்துழைப்பு நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
சபா மாநில அரசியலின் நிலைத்தன்மையும் மாநில மக்களின் மேம்பாடும் எங்களுக்கு முக்கியம் என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
சபா மாநில மேம்பாட்டிற்கு கூட்டரசு அரசாங்கம், மாநில அரசாங்கம் இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்